சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை நிலவரம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,470-க்கு ஏலம் போனது.

Update: 2021-11-19 00:45 GMT

கோப்பு படம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல்,  மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்தில் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகு திகளில் உள்ள சுமார் 30 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 2 டன் பூக்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள்.

இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.1,470-க்கும், முல்லை ரூ.680-க்கும், காக்கடா ரூ.850-க்கும், செண்டு மல்லி ரூ.105 க்கும், பட்டு பூ ரூ.135-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கன காம்பரம் ரூ.800-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.300 க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும் ஏலம் போயின. 

Tags:    

Similar News