சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,205-க்கு ஏலம்

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட்டில், மல்லிகைப்பூ கிலோ ரூ.2,205-க்கு ஏலம் போனது.

Update: 2021-11-16 00:15 GMT

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு, சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 30 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள்,  2 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.

இந்த ஏலத்தில்,  மல்லிகைப்பூ (கிலோ) ரூ.2 ஆயிரத்து 205 க்கும், முல்லை பூ ரூ.660-க்கும், காக்கடா ரூ.700-க்கும், செண்டு மல்லி ரூ.58-க்கும், பட்டுப்பூ ரூ.71-க்கும், ஜாதிமல்லி ரூ.500 க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.25-க்கும், அரளி ரூ.280-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.80-க்கும் ஏலம் போயின.

Tags:    

Similar News