சத்தியமங்கலம் பூ மார்க்கெட் நிலவரம்

சத்தியமங்களம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,155-க்கு ஏலம் விடப்பட்டது

Update: 2021-11-17 23:30 GMT

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட்டில் இங்கு தினமும் பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் 3 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.

இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ (கிலோ)ரூ.1,155 க்கும், முல்லை ரூ.550-க்கும், காக்கடா ரூ.775-க்கும், செண்டு மல்லி ரூ.95-க்கும், பட்டுப்பூ ரூ.90-க்கும், ஜாதிமல்லி ரூ.500 க்கும், கனகாம்பரம் ரூ.1,000-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும், அரளி ரூ.320-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் ஏலம் போனது.

Tags:    

Similar News