சத்தியமங்கலம் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பு தீவிரம்

சத்தியமங்கலம் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-11-26 06:45 GMT

சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையால் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலை ஓரங்கள், தாழ்வான பகுதிகள் மற்றும் டயர்கள் உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்கியுள்ளது. நீண்ட நாள்களாக மழைநீர் தேக்கத்தால் டெங்கு காய்ச்சல் பரவும் என்பதால் நகராட்சி மக்கள் குடியிருப்புகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அரசு அலுவலகங்கள், வீடுகள், பள்ளிகள் அருகில் தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள இடங்கள், பிளாஸ்டிக் பொருள்கள், டயர்கள், உடைந்த குடங்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருள்கள் உள்ள இடங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணிகளில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் தொடர்ந்து தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் கொசு மருந்து தெளிக்கப்படும் என்றும் நீண்ட நாள் பயன்பாடின்றி உள்ள பொருள்களில் தண்ணீர் தேங்கினால் அதனை சுத்தம் செய்யுமாறு சத்தியமங்கலம் நகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

Tags:    

Similar News