சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை: மக்கள் அவதி

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 3 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் மின் தடை மக்கள் அவதி.;

Update: 2021-10-26 10:30 GMT

சத்தியமங்கலம் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் ஏற்பட்ட மின்தடையால் வாகனங்கள் சாலைகளில் விளக்குகளை மிளிரவிட்டு செல்லும் காட்சி.

சத்தியமங்கலம் பகுதியில் இரவு 9 மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்தது. நேரம் செல்ல செல்ல இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. சத்தியமங்கலம், ஒட்டகுட்டை, ராஜன்நகர், சிக்கரசம் பாளையம், வடவள்ளி, குய்யனூர், அரியப்பம்பாளையம், காந்தி நகர்,தொட்டம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டியது.

இன்று அதிகாலை 5 மணி வரை பலத்த மழை பெய்தது. தொடர்ந்து தூரல் தூறி கொண்டே இருந்தது. சத்தியமங்கலம் பகுதியில் இடி- மின்னல் ஏற்பட்டதால் இரவு 9 மணி முதல் 12 மணிவரை மின் தடை ஏற்பட்டது. இதனால் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதி அடைந்தனர்.

Tags:    

Similar News