சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்
சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.900-க்கு விற்பனையானது
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூமார்க்கெட் உள் ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும்.
நேற்று நடந்த ஏலத்தில் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் 3 டன் பூக்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள். இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.507-க்கும், முல்லை ரூ.480 க்கும், காக்கடா ரூ.500-க்கும், செண்டுமல்லி ரூ.78-க்கும், பட்டுப்பூரூ.72-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம்ரூ.900-க்கும், சம்பங்கிரூ. 25 -க்கும்,அரளி ரூ.250-க்கும், துளசி ரூ.30க்கும், செவ்வந்தி ரூ.180-க்கும் ஏலம் போனது.