சத்தியமங்கலம் மார்க்கெட்டில் பூக்களின் விலை நிலவரம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.620-க்கு விற்பனை ஆகிறது.

Update: 2021-10-17 00:30 GMT

கோப்பு படம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி,  நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் இருந்து, விவசாயிகள் 3 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.

இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.262-க்கும், காக்கடா ரூ.125-க்கும், செண்டுமல்லி ரூ.48-க்கும், ஜாதிமல்லி ரூ.300-க்கும், கனகாம்பரம் ரூ.620-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும், அரளி ரூ.140-க்கும், துளசி ரூ.30-க்கும் ஏலம் போயின.

Tags:    

Similar News