சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,660-க்கு ஏலம்
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரே நாளில் கிலோவுக்கு 700 ரூபாய் விலை உயர்ந்து ரூ.2,660-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.;
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரே நாளில் கிலோவுக்கு 700 ரூபாய் விலை உயர்ந்தது. நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ (கிலோ ஒன்று) ரூ.2 ஆயிரத்து 660-க்கும், முல்லை ரூ.1,340-க்கும், காக்கடா ரூ.1,300-க்கும், செண்டுமல்லி ரூ.110-க்கும், பட்டுப்பூ ரூ.100-க்கும், ஜாதிமல்லி ரூ.750-க்கும், கனகாம்பரம் ரூ.1,000-க்கும், சம்பங்கி ரூ.160-க்கும், அரளி ரூ.350-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் ஏலம் போயின.