புஞ்சைபுளியம்பட்டியில் மளிகை கடையில் பட்டாசு பதுக்கியவர் கைது

ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டியில் மளிகை கடையில் பட்டாசு பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-11-03 09:15 GMT

புஞ்சை புளியம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் புளியம்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது புளியம்பட்டி காந்திநகரில் பட்டாசு பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து புளியம்பட்டி போலீசார் காந்திநகரில் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் மைக்கேல் (வயது 48) என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார். அந்த மளிகை கடையில் சோதனை செய்தபோது அனுமதியின்றிபட்டாசுகள் பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தீபாவளியை முன்னிட்டு அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் பட்டாசுகளை உரிய அனுமதி இன்றி வாங்கி அதை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிந்தது.இதையடுத்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜ் மைக்கேலை கைது செய்தனர். மேலும் அவரிடம் பட்டாசுகள் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News