பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்
பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 5,433 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. ஆற்றில் குடிநீருக்கு மட்டும், விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பவானி காலிங்கராயன் அணைக்கு அதிகளவில் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. வாய்க்கால் பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீரைக் காட்டிலும், உபரியாக வரும் மழை நீர் விநாடிக்கு 5,433 கன அடி வீதம் பவானி ஆற்றின் வழியாக காவிரி ஆற்றுக்கு வெளியேற்றப்படுகிறது.