சத்தியமங்கலம்: பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அகற்ற கையெழுத்து இயக்கம்
பெண்களுக்கு எதிரான வன்முறையை அகற்றும் சர்வதேச பெண்கள் தினம், சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் அனுசரிக்கப்பட்டது,;
சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை கையெழுத்து இயக்க நிகழ்ச்சியை, ரீடு நிறுவன இயக்குநர் கருப்புசாமி, கூடுதல் இயக்குநர் மகேஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தனர். இதில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
தனிநபர்களால் நிகழ்த்தப்படுபவற்றின் வகைகளில் வன்கொடுமை, குடும்ப வன்முறை, பாவின துன்புறுத்தல், கருத்தடுப்பு முறைகளின் கட்டாயப் பயன்பாடு, பெண் சிசுக் கொலை, பால் தெரிவு கருக்கலைப்பு, மகப்பேறு வன்முறை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கிறது. அதனை பெண்கள் எதிர்த்து களம் காண பெண்களுக்கு எதிரான சர்வசேத தினம் அனுசரிக்கப்படுகிறது என ரீடு தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பயணிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.