கர்நாடகவில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்: ஈரோட்டை சேர்ந்தவர் கைது

கர்நாடக மாநிலம், மைசூரில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தாளவாடியை சேர்ந்த இளைஞர் கைது.;

Update: 2021-08-28 08:15 GMT

சூசைபுரம் கிராமத்தில் மைசூர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலம், மைசூர் சாமுண்டி கோவில் அருகே கடந்த 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 7.30 மணிக்கு தனியார் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர்களை வழிமறித்த சிலர் அந்தப் பெண்ணை வனப்பகுதிக்குள் இழுத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கர்நாடக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பலாத்காரம் நடைபெற்ற இடத்தில் இருந்த செல்போன் டவர் மூலம் ஆய்வு மேற்கொண்டதில் ஐந்து பேர் கொண்ட கும்பல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 5 பேரில் ஒருவர் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி சூசைபுரம் கிராமத்தில் வசிக்கும் பழனிச்சாமி என்பவரது மகன் பூபதி (28) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மைசூரிலிருந்து வந்த போலீசார் பூபதியை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். மீதமுள்ள நான்கு பேர் யார் என்பது குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செயயப்பட்ட சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News