திம்பம் மலைப்பகுதியில் பஸ்- லாரி மோதல்: அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
திம்பம் மலைப்பகுதியில் அரசு பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.;
விபத்துக்குள்ளான அரசுப்பேருந்து - லாரி.
தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் இருந்து 40 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
திம்பம் மலைப்பாதை 22-வது கொண்டை ஊசி வளைவு அருகே பேருந்து சென்றபோது மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரியை மற்றொரு சரக்கு லாரி முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்தின் பக்கவாட்டுப் பகுதியில் லாரி மோதியதில் அரசு பேருந்தின் பக்கவாட்டுப் பகுதியில் பேருந்து சேதமடைந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 40க்கு மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். மலைப்பாதையில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதால் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆசனூர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பேருந்தில் வந்த பயணிகள் மாற்று பேருந்தில் ஏற்றி சத்தியமங்கலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.