ஈரோடு அருகே ரயில் முன் பாய்ந்து கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை

ஈரோடு அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ரயில் முன் பாய்ந்து கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-09-08 11:07 GMT

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த வெள்ளாள பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. செந்தில்குமார் ஒரிச்சேரியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக செந்தில்குமார் குடும்ப பிரச்சினை மற்றும் கடன் பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இதனால் தற்கொலை செய்ய முடிவெடுத்த செந்தில் குமார் சம்பவத்தன்று மதியம் தனது பெரியம்மா மகள் ரம்யாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

பின்னர் செந்தில்குமார் நேராக தொட்டிபாளையம் ரெயில் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சகாப்தி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென செந்தில்குமார் ரெயில் முன் பாய்ந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார்.

அவரது உடலை பார்த்து மனைவி மற்றும் உறவினர்கள் அல்லது பரிதாபமாக இருந்தது. இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News