சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை
சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது;
22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று காலை முதல் லேசான வெயில் காணப்பட்ட நிலையில் இரவு 8 மணியிலிருந்து சுமார் இரண்டு மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. புஞ்சை புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியான புங்கம்பள்ளி,பனையம்பள்ளி,காவிலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 9மணியளவில் திடீரென பலத்த மழை பெய்தது இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதோடு அப்பகுதி முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை உருவானது. மழை காரணமாக சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.