ஒரேநாளில் 3 அடி உயர்ந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

Update: 2024-05-24 03:30 GMT

பவானிசாகர் அணை.

BHAVANISAGAR DAM WATER LEVEL:-

வானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதுமட்டுமல்லாமல் ஈரோடு, சத்தியமங்கலம், கோபி, பவானி ஆகிய பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்குகிறது. 

இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக மேட்டுப்பாளையத் தில் இருந்து பவானிசாகர் அணைக்கு வரும் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. நேற்று (மே.23) வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 11,567 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (மே.24) வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 6,738 கன அடியாக சரிந்துள்ளது.

நேற்று காலை 47.45 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரேநாளில் 3.5 அடி உயர்ந்து இன்று காலை 51.02 அடியானது. அணையில் நீர் இருப்பு 4.68 டிஎம்சியாக இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன‌ அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், பவானிசாகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 20.0 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. 

Tags:    

Similar News