பவானிசாகர் அணை நீர்மட்ட நிலவரம்..!

Bhavanisagar Dam Water Level: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று (26ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,134 கன அடியாக சரிந்துள்ளது.

Update: 2024-08-26 04:45 GMT

பவானிசாகர் அணைப் பகுதி.

BHAVANISAGAR DAM WATER LEVEL

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று (26ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,134 கன அடியாக சரிந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், மாயாறும் இணையும் இடத்தில் கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

அணைக்கு நீர்வரத்து நேற்று (25ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,981 கன அடியாக இருந்த நிலையில், இன்று (26ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,134 கன அடியாக சரிந்துள்ளது. அதேசமயம், நேற்று காலை 97.34 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 97.34 அடியாகவே நீடிக்கிறது. அணையில் நீர் இருப்பு 26.69 டிஎம்சியாக உள்ளது.

மேலும், அணையில் இருந்து அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1.700 கன அடியும், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 600 கன அடியும், காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிக்கு வினாடிக்கு 100 கன அடியும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News