64 அடியாக சரிந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி 64.76 அடியாக சரிந்தது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி 64.76 அடியாக சரிந்தது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, 105 அடி உயரமும் 32.8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள, 2 லட்சத்து, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த சில நாட்களாக, பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால், அவ்வப்போது அணைக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் என மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது. மேலும், கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்தைக் காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து தற்போது 64 அடிக்கும் கீழே சென்றுவிட்டது.
புதன்கிழமை (நவம்பர் 01) இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-
நீர் மட்டம் - 64.76 அடி ,
நீர் இருப்பு - 8.89 டிஎம்சி ,
நீர் வரத்து வினாடிக்கு - 378 கன அடி ,
நீர் வெளியேற்றம் - 1,950 கன அடி ,
கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு வினாடிக்கு 1,800 கன அடி நீரும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி நீரும் என மொத்தம் 1,950 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.