பவானிசாகர் அணை நீர்மட்டம் 95 அடியை நெருங்கியது
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (4ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,024 கன அடியாக சரிந்த நிலையில், அணை நீர்மட்டம் 95 அடியை நெருங்கி வருகிறது.;
பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (4ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,024 கன அடியாக சரிந்த நிலையில், அணை நீர்மட்டம் 95 அடியை நெருங்கி வருகிறது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக உள்ளது. இவ்வணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்ந்தது. தற்போது மழை குறைந்ததால் நீர்வரத்து சரிந்துள்ளது.
நேற்று (3ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,092 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (4ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,024 கன அடியாக சரிந்தது.
அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 94.47 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 94.70 அடியை எட்டியது. விரைவில் 95 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், நீர் இருப்பு 24.61 டிஎம்சியிலிருந்து 24.77 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,055 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.