பவானிசாகர் அணை நீர்மட்டம் 94.29 அடியாக சரிவு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (13ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 94.29 அடியாக சரிந்தது.;
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (13ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 94.29 அடியாக சரிந்தது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி இருந்து வருகிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும்.
இந்நிலையில், நீலகிரி மலைப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு வரும் நீரின் அளவு திடீரென அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. அணைக்கு நேற்று (12ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,038 அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (13ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 528 கன அடியாக சரிந்தது.
அதேசமயம், அணைக்கு வரும் நீரின் அளவைக் காட்டிலும், அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 94.58 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 94.29 அடியாக சரிந்தது. அதேபோல், நீர் இருப்பும் 24.49 டிஎம்சியாக குறைந்தது.
மேலும், அணையில் இருந்து பாசனத்திற்கு கீழ்பவானி வாய்க்கால், அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்கால் மற்றும் காலிங்கராயன் வாய்க்காலில் மொத்தம் வினாடிக்கு 3,150 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 100 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.