பவானி அருகே வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, ஒரிச்சேரிப்புதூரில், வன்னியர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-11-07 02:15 GMT

ஒரிச்சேரிப்புதூரில் வன்னியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டு ஆணையை, உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  வன்னியர்களும் , பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக,  ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஒரிச்சேரிப்புதூரில் வன்னியர் சங்கத்தின் சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கிட்டை மீண்டும் வழங்க கோரி,  தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கும் விதமாக, அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

இதில் ஒரிச்சேரிப்புதூர் கிளையின் வன்னியர் சங்க தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். பாட்டாளி கட்டுமான தொழிற்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் குருசாமி முன்னிலை வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வன்னியர் சார்பில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆப்பக்கூடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News