கவுந்தப்பாடி அருகே வேன் டிரைவர் தண்ணீரில் மூழ்கி பலி

கவுந்தப்பாடி அருகே வேன் டிரைவர் மதுபோதையில் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-10-26 13:15 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த எல்.எம். பாலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 38). இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். ஈஸ்வரன் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று ஈஸ்வரன் நண்பர்களுடன் சேர்ந்து எல்.எம். பாலப்பாளையம் அடுத்த தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென ஈஸ்வரன் மதுபோதையில் தண்ணீரில் மூழ்கினார். நண்பர்கள் உடனே அவரை காப்பாற்ற முயன்றனர், ஆனால் முடியவில்லை. இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஈஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News