கவுந்தப்பாடி வாரச்சந்தையில் இறந்து கிடந்த வியாபாரி: போலீசார் விசாரணை

கவுந்தப்பாடியில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் உயிரிழந்த வியாபாரியின் உடலை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-10-18 05:00 GMT

கவுந்தப்பாடி காவல் நிலையம் (பைல் படம்).

கவுந்தப்பாடி அருகே எரப்பநாயக்கனூரை சேர்ந்தவர் பழனிச்சாமி, 51, வாழைக்காய் வியாபாரி. இவர் நேற்று மாலை கவுந்தப்பாடி வாரச்சந்தை அருகே ரத்த வாந்தி எடுத்த நிலையில் இறந்து கிடந்தார். இந்நிலையில் அவ்வழியாக சென்றவர்கள் இறந்து கிடந்தவரின் உடலை பார்த்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவருக்கு தங்கமணி, 41, என்ற மனைவியும், ஏழு வயதில் மகள் இருப்பதாக தெரிவித்தனர். உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News