பவானி பகுதியில் தடுப்பூசி முகாம் : சப்-கலெக்டர், வட்டாட்சியர் ஆய்வு

பவானி பகுதியில் இன்று நடைபெற்ற தடுப்பூசி முகாமினை சப்-கலெக்டர் மற்றும் வட்டாசியர் ஆய்வு மேற்கொண்டனர்.;

Update: 2021-10-03 06:30 GMT

பவானி காமராஜர் நடுநிலைப்பள்ளி தடுப்பூசி மையத்தில், கோபி சப்-கலெக்டர் மீனாட்சி மற்றும் பவானி வட்டாசியர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் இன்று நான்காம் கட்டமாக மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டம் பவானி வட்டாரத்தில் 60 மையங்களில் 10 ஆயிரம் பேருக்கும், அம்மாபேட்டை வட்டாரத்தில் 51 மையங்களில் 7,250 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு தடுப்பூசி முகாம்களில் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

பவானி காமராஜர் நடுநிலைப்பள்ளி, ஸ்வர்ணபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தடுப்பூசி மையங்களில் கோபி சப்-கலெக்டர் மீனாட்சி மற்றும் பவானி வட்டாசியர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் வயதான முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும்போது,  இரத்த அழுத்தம் சரிபார்த்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என, சுகாதாரப் பணியாளர்களுக்கு அறிவுரை கூறினார்.

Tags:    

Similar News