சித்தோடு: தோட்டத்தில் இருந்த 7 ஆடுகளை கடித்து கொன்ற தெருநாய்கள்
கங்காபுரம் மேட்டையன்காடு பகுதியில் உள்ள தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த 7 ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்றது.;
பவானி அருகே உள்ள கங்காபுரம் மேட்டையன்காடு பகுதியை சேர்ந்த விவசாயி மூர்த்தி. இவரது விவசாய நிலத்தில் ஆடுகளும் வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தோட்டத்திற்கு வந்த தெருநாய்கள் பட்டியில் இருந்த ஆடுகளை கடித்து, வெகு தொலைவில் ஆடுகளை இழுத்துச் சென்று போட்டுவிட்டும் சென்றன. இதுகுறித்து மூர்த்தி கூறியது: எனது தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து வருகிறேன். நேற்று முன்தினம் இரவில் தெரு நாய்கள் சேர்ந்து ஆட்டை கடித்ததில், ஏழு ஆடுகளை கொன்று விட்டன. அவற்றின் மதிப்பு, 35 ஆயிரம் ரூபாய் முதல் 45 ஆயிரம் ரூபாயாகும். கடந்த வாரம் எனது பெரியப்பாவின் இரண்டு ஆட்டை, இதேபோன்று தெரு நாய்கள் கடத்து கொன்றுவிட்டன என வேதனையோடு கூறினார்.