பவானி: ஒலகடம் சொக்கநாச்சி அம்மன் கோவில் குண்டம் திருவிழா

பவானி அருகே உள்ள ஒலகடம் சொக்கநாச்சி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்

Update: 2022-05-04 14:30 GMT

குண்டம் திருவிழாவில் எடுக்கப்பட்ட படம்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஒலகடம் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ ராஜராஜேஸ்வரி சொக்கநாச்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 19-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் விழா இன்று நடைபெற்றது. முன்னதாக, அம்மாபேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு சொக்கநாச்சி அம்மன் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து அந்தியூர்,பவானி,அம்மாபேட்டை ,நெருஞ்சிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கடந்த 15 நாட்களாக விரதம் இருந்து இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து கோவில் முன் அமைக்கப்பட்ட 60 அடி நீள குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனை தரிசித்து சென்றனர். இதன் பின்னர் சாமிக்கு பொங்கல் வைத்து கிடா வெட்டும் நிகழ்வு நடைபெற்றது.மேலும் நாளை கம்பம் ஊர்வலம் , மஞ்சள் நீராட்டம் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News