மயங்கிய நிலையில் கிடந்த முதியவர் மீட்பு

பவானி ஆற்றங்கரை முட்புதரில் மயங்கிய நிலையில் கிடந்த முதியவரை தீயணைப்புத் துறையினர் மீடடனர்.;

Update: 2021-11-17 00:15 GMT

ஆற்றங்கரையில் மயங்கிய நிலையில் இருந்த முதியவரை மீட்ட தீயணைப்புத்துறையினர்.

பவானிஅடுத்த தி்ப்பிசெட்டிபாளையம் பவானி ஆற்றங்கரை முட்புதரில் முதியவர் ஒருவர் மயங்கி கிடப்பதாக பவானி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத் தது.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று முட்புதர்களை அகற்றி முதியவரை மீட்டனர். மீட்கப்பட்ட முதியவர் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் இது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியை சீரங்கன் (வயது 60) என்பதும், அவர் பவானி பகுதியில் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது. எனினும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.

Tags:    

Similar News