பவானியில் மழை நீர் வடிகால்களில் தூய்மை பணி மும்முரம்

மழைக்காலம் தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவானியில் மழை நீர் வடிகால்களில் தூய்மை பணி மும்முரமாக நடைபெற்றது.;

Update: 2021-09-22 05:22 GMT

பவானியில் மழை நீர் வடிகால்களில் தூய்மை பணி மும்முரமாக நடைபெற்றது. 

பவானி :

பவானி உதவி கோட்ட பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் இளவரசு மேற்பார்வையில்  பவானி பகுதியில் மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள்  தூய்மைபடுத்தப்பட்டு வருகிறது. 40க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர்கள், புதர்கள், செடி, கொடிகள், கற்களை அகற்றி மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் ரோடுகளின் குறுக்கே உள்ள சிறு பாலங்களில் தண்ணீர் எளிதில் கடந்து செல்லும் வகையில் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. பவானி, வெள்ளித்திருப்பூர் ரோடு, பவானி அந்தியூர் ரோடு, ஆப்பகூடல் தவிட்டுபாளையம் ரோடு, ஜம்பை ஊராட்சி கோட்டை ரோடுகளிலும் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனை இன்ஸ்பெக்டர்கள் ஜோதிபாசு, வெங்கடேஷ், ஆனந்தகுமார், ஜெயலட்சுமி, மாரியம்மாள் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News