ஆப்பக்கூடலில் மழை: விவசாய தோட்டத்திற்குள் புகுந்த மழை நீர்

ஆப்பக்கூடலில் இன்று மதியம் பெய்த மழையால் சாலையில் நீர் தேங்கியது‌;

Update: 2021-10-26 14:45 GMT

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்.

ஆப்பக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மதியம் கனமழை பெய்தது. ஆப்பக்கூடல், வெள்ளாளபாளையம், புதுப்பாளையம், ஓசைபட்டி, கரட்டுப்பாளையம், ஓரிச்சேரிப்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ச்சி நிலவியது.


ஆப்பக்கூடல்-பவானி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதுட்டுமின்றி சாலையின் இருபுறமும்  இருந்த தண்ணீர் தோட்டத்திற்குள் புகுந்தது. இதனால் கரும்பு பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் சாலையில் கழிவு நீருடன் மழைநீர் கலந்து சாலையில் தேங்கி நிற்பதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.



 


Tags:    

Similar News