பவானி ஆப்பக்கூடலில் மர்மமான முறையில் பூக்கடை வியாபாரி உயிரிழப்பு: நண்பர் கைது
பவானி ஆப்பக்கூடலில் மர்மமான முறையில் பூக்கடை வியாபாரி உயிரிழந்த வழக்கில் 4 மாதங்களுக்கு பின் ஒருவர் கைது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஆப்பக்கூடல் பெருந்தலையூர் ஆற்றிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்தவர் அடுத்த நாள் காலை ஒரிச்சேரி ஆற்றங்கரையோரம் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடைந்தார். ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடைந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் நாகராஜ் என்பதும் பூக்கடை வியாபாரி என விசாரணையில் தெரியவந்தது.
முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக தெரிந்தவர்கள் யாரேனும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த சில நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்ததில் ரகசிய தகவலின் அடிப்படையில் ஆப்பக்கூடல் சக்திநகரை சேர்ந்த நாகராஜின் நண்பர் கட்டிட தொழிலாளி சண்முகத்தை கைது செய்தனர். இதுபற்றி சண்முகத்திடம் போலீசார் விசாரணை நடத்தியதில் நாகராஜ் உடலை கைப்பற்றிய முன்தினம் மாலை பவானி ஆற்றிக்கு இருவரும் சென்றதாகவும், அப்போது நாகராஜ் பாலியல் சிண்டலில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்து கீழே கிடந்த கல்லால் தாக்கியதில் நாகராஜ் மயங்கி விழுந்துவிட்டர். இறந்து நாகராஜ் உடலை ஆற்றில் வீசிவிட்டு யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து சென்றுவிட்டதாக சண்முகம் கூறியதாக ஆப்பக்கூடல் போலீசார் தெரிவித்தனர். மேலும் குற்றவாளி சண்முகத்தினை பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.