சித்தோடு ஆவின் பாலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சித்தோடு ஆவின் பாலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட சித்தோடு ஆவின் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் அக்டோபர் 25 இன்று ஒன்றியத்தில் சுமார் 90 நாட்கள் பால் பண பாக்கி ரூ.62 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். பால் பணத்தை வங்கியில் செலுத்தாமல் ஆரம்ப சங்கங்களிலிலேயே வழங்க வேண்டும். துணை குளிரூட்டும் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள பாக்கியை உடனே வழங்கவும், வாகன வாடகையை உடனே வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . ஆரம்ப சங்கத்திலிருந்து பாலை துணை குளிரூட்டும் நிலையத்திற்கு வாகனத்தில் எடுக்கும் முன்பாக பாலின்' அளவையும், தரத்தையும் குறித்துக் கொடுக்க வேண்டும். புண்ணாக்கு பால் கொள்முதல் விலை 2019 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது . இந்த இடைப்பட்ட காலத்தில் தவுடு, கலப்புத்தீவனம் பருத்திக்கொட்டை, உலர் தீவனம் உள்ளிட்ட பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி பசும்பாலுக்கு ரூ.42 எனவும், எருமைப்பாலுக்கு ரூ .51 எனவும் கொள்முதல் விலை அறிவித்திட வேண்டும். புதிய அரசு விற்பனை விலையை 1 லிட்டருக்கு ரூ .3 வீதம் குறைத்ததால் ஆவினுக்கு 1 வருடத்திற்கு சுமார் ரூ.300 கோடி இழப்பு ஏற்படும் இதை ஈடுகட்ட தமிழக அரசு மானியமாக வழங்கி ஆவினை பாதுகாக்க வேண்டும். சென்ற ஆட்சியில் ஒன்றியங்களை பிரித்ததில் புதிய ஊழியர்களை நியமித்ததில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த விவரிவான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஆவின் நிர்வாகத்தில் நிலவுகிற ஊழல், ஊதாரித்தனங்களை தடுத்திட வேண்டும் ஆவின் மாநில இணையத்திலும், மாவட்ட ஒன்றியங்களிலும் நிர்வாக சீர்திருத்தம் செய்து செலவீனத்தை கட்டுப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விஜயகுமார். மாவட்ட செயலாளர் தலைமையில் முனுசாமி மாநில தலைவர் முத்துசாமி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வெங்கிடுசாமி மாவட்ட தலைவர் பெரியசாமி மாவட்ட பொருளாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.