சித்தோடு மார்க்கெட்டிற்கு வெல்லம் வரத்து அதிகரிப்பு
கூடுதல் வெல்ல மூட்டைகள் வரத்தானதால் உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை, அச்சுவெல்லத்தை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்;
பைல்படம்
ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த சித்தோட்டில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று வெல்ல மார்க்கெட் கூடும். இந்த மார்க்கெட்டில் ஈரோடு மற்றும் சுற்றுப் புற பகுதியில் கரும்பாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம் போன்றவை 30 கிலோ சிப்பமாக கொண்டு வந்து, ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும்.
இதன்படி, நேற்றுகூடிய மார்க்கெட்டில் வெல்ல மூட்டைகள் கடந்த வாரத்தை காட்டிலும் கூடுதலாக வரத்தானது. இதில், நாட்டுச்சர்க்கரை 2,900 மூட்டையும், உருண்டை வெல்லம் 6,000மூட்டையும், அச்சு வெல்லம் மூட்டையும் வரத்தானது. நாட்டுச் சர்க்கரை சிப்பம்ரூ.1,000 முதல் ரூ.1,180 வரையும், உருண்டை வெல்லம் ரூ.1,130 முதல் ரூ.1,270 வரையும், அச்சு வெல்லம் ரூ.1,050 முதல் ரூ.1,180 வரை என்ற விலையில் விற்பனையானது. மேலும், கடந்த வாரம் விற்பனையான விலையிலேயே இந்த வாரம் விற்பனையானதாகவும், கூடுதல் வெல்ல மூட்டைகள் வரத்தானதால் வியாபாரிகள் அதிகளவில் உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை, அச்சுவெல்லம் மூட்டைகளை கொள்முதல் செய்தததாகவும் வெல்ல மார்க்கெட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.