பவானி அருகே காட்டன் குடோனில் தீ விபத்து
பவானி அருகே காட்டன் கழிவு மறுசுழற்சி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 லட்சம் மதிப்பிலான காட்டன் கழிவுகள் சேதமடைந்தன.;
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் அதே பகுதியில் காட்டன் கழிவு மறுசுழற்சி தொழில் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு காட்டன் கழிவு மூட்டைகளில் இருந்து தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் பேரின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு நிலைய அலுவலர் காந்தி தலைமையிலான வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயிணை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் 2 லட்சம் மதிப்பிலான காட்டன் கழிவுகள் தீயில் கருகி சேதமடைந்து இருக்கலாம் எனவும் தகவல் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காஞ்சிக்கோயில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.