கவுந்தப்பாடியில் பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல் நிலைப்பளிளில் இன்று 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பளிளில் இன்று 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் பள்ளி தலைமையாசிரியர் சேகர் முன்னிலையில் காலை எட்டு முப்பது மணியிலிருந்து பள்ளிக்கு வரும் மாணவ, மலர் மாணவிகளை தூவி இனிப்பு வழங்கி வரவேற்றார்கள். முன்னதாக மாவிலை, வாழை மரங்கள், தோரணங்கள் அமைத்து யானை பொம்மை வைத்து குழந்தைகளை மகிழ்வித்து வரவேற்கும் வகையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் ஆசிரியை ஆசிரியர்கள் வரவேற்பு கொடுத்தார்கள்.