கவுந்தப்பாடியில் ரூ.28 லட்சத்து 84 ஆயிரத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் ரூ.28.84 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை விற்பனையானது.;
நாட்டுச் சர்க்கரை.
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டு சர்க்கரை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,135 மூட்டைகளில் 68 ஆயிரத்து 100 கிலோ நாட்டு சர்க்கரையை கொண்டுவந்தனர்.
இதில் 60 கிலோ மூட்டை குறைந்தபட்ச விலையாக 2 ஆயிரத்து 510 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2 ஆயிரத்து 580 ரூபாய்க்கும் என மொத்தம் 28 லட்சத்து 84 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இந்த தகவலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.