கவுந்தப்பாடியில் நாட்டு சர்க்கரை ஏலம்: பழனி தேவஸ்தானம் கொள்முதல்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 28.84 லட்சம் ரூபாய்க்கு பழனி கோவில் தேவஸ்தான நிர்வாகம் நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்தது.;

Update: 2021-10-31 05:00 GMT

நாட்டு சர்க்கரை 

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாட்டு சர்க்கரை ஏலம் நேற்று நடந்தது. இரண்டாம் தரம் (மீடியம்), 60 கிலோ மூட்டையாக, 2,510 ரூபாய் முதல், 2,580 ரூபாய் வரை விற்பனையானது.

இதில், 1,135 மூட்டைகளை, 28.84 லட்சம் ரூபாய்க்கு, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தேவஸ்தான நிர்வாகம் கொள்முதல் செய்தது. விலை கட்டுப்படி ஆகாததால், 687 மூட்டைகளை, விவசாயிகள் கிடங்கில் இருப்பு வைத்ததாக விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News