பவானி நகராட்சி பகுதியில் நடமாடும் வாகனம் மூலம் கொரோனா தடுப்பூசி

பவானி நகராட்சி பகுதியில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு நடமாடும் வாகனம் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Update: 2021-10-10 08:45 GMT

பவானியில் நடமாடும் வாகனம் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான அறிவிப்பு ஒலிபெருக்கி மூலம்  வெளியிடப்பட்டது.

தமிழகம் முழுவதும் அரசு சார்பில் ஐந்தாம் கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 30 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி பகுதியில் 13 இடங்களில் கொரோனா தடுப்பூசி காலை 8 மணி முதல் செலுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

பவானி நகராட்சி பகுதியில் மாற்றுத்திறனாளிகள் , முதியவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்த மையத்திற்கு வர இயலாதவர்களுக்கு நகராட்சி சார்பில் நடமாடும் வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பவானி நகராட்சி ஆணையாளர் லீனா சைமன் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News