பவானியில் பா.ஜ.க. அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இயக்கம்

பவானியில் பா.ஜ.க. அரசை கண்டித்து பிரச்சார இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2021-09-20 03:40 GMT

பவானியில் பா.ஜ.க. அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி, இடது தொழிற்சங்க மையம்

பிரச்சார இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பவானி :

பெரியார் பிறந்த நாளான செப். 17 முதல் பகத்சிங் பிறந்த நாளான செப். 28 வரையில் மாநிலம் தழுவிய மக்கள்  கோரிக்கை பிரச்சார இயக்கத்தை கம்யூனிஸ்ட் கட்சி, இடது தொழிற்சங்க மையம் நடத்துகிறது.

கோவையில் தொடங்கி சென்னையில் முடிவடையும் இந்த பிரச்சார இயக்கத்தில் மக்களுக்கு விரோதமான, விவசாயிகள் நலனுக்கு எதிராக செயல்படும் பா.ஜ.க அரசு பதவி விலக வேண்டும், தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என பிரச்சார பயணத்தில் வலியுறுத்தப்பட்டது.

அந்தியூர் மேட்டூர் பிரிவில் நடைபெற்ற இப்பிரச்சாரத்திற்கு கட்சியின் ஆலோசனை குழு தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். பவானி நகர பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். அம்பத்தூர் செயலர் மோகன், எல்.டி.யூ.சி. மாநில பொதுச் செயலர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் நாச்சிமுத்து, சிங்காரவேலு, திருமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News