கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்திய ஆம்புலன்ஸ் டிரைவர்
பவானி அருகே கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்திய ஆம்புலன்ஸ் டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
பவானி பழனியாண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் சீனிவாசன், ஆம்புலன்ஸ் டிரைவர். மெக்கான் வீதியை சேர்ந்தவர் முருகன் கட்டிட தொழிலாளி. இவர், அடிக்கடி சீனிவாசனுடன் ஆம்புலன்சில் உதவியாளராக சென்று வந்தார். இதேபோல் சம்பவத்தன்று 2 பேரும் ஆம்புலன்சில் வாடகைக்கு சென்று விட்டு மது குடித்து கொண்டு இருக்கும் போது அவர்களுக்குள் பணம் பிரிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் ஏற்பட்டு சீனிவாசன் முருகனை கத்தியால் குத்திவிட்டார். இது தொடர்பாக சீனிவாசன் மீது பவானி போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.