பவானியில் ஏஐடியூசி பெயர் பலகை திறப்பு விழா
பவானி நகராட்சி அலுவலகம் முன்பு மாவட்ட உள்ளாட்சித்துறை சங்கத்தின் கிளை திறப்பு விழா நடைபெற்றது.;
பவானி நகராட்சி அலுவலகம் முன்பு ஏஐடியூசி ஈரோடு மாவட்ட உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கம் சார்பில் பழைய கொடி கம்பத்தில் கொடியேற்றுதல், பெயர் பலகை வைத்து கிளை தொடக்க விழா நிகழ்ச்சி பவானி அலுவலகம் முன்பு நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட உள்ளாட்சித்துறை பணியாளர் சங்க துணை தலைவர் செல்லப்பன் தலைமை தாங்கி நடத்தினார். இதில் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.