பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளை பொருட்கள் ஏலம்
பவானி அருகே பூதப்பாடியில் 5.80 லட்சத்திற்கு விளை பொருட்கள் ஏலம் போனது.;
ஒழுங்குமுறை விற்பனை கூடம்.(மாதிரி படம்)
பவானி:
பவானி அருகே பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்கு வந்த 4,524 தேங்காய்களில், சிறியவை 6.16 ரூபாய் முதல், பெரியவை 15.77 ரூபாய் வரை விற்பனையாகி 43, 359 ரூபாய்க்கும், 86 மூட்டை தேங்காய் பருப்பு கிலோ 90.06 ரூபாய் முதல் 100.76 ரூபாய் வரை விற்பனையாகி 1,75,614 ரூபாய்க்கும், ஏலம் போனது.
77 மூட்டை நிலக்கடலை கிலோ 60.39 ரூபாய் முதல் 62.39 ரூபாய் வரை விற்பனையாகி 1,34,132 ரூபாய்க்கும், 106 மூட்டை நெல் கிலோ 13.40 ரூபாய் முதல் 20.07 ரூபாய் வரை விற்பனையாகி 1,30,811 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் 321 மூட்டை 199.40 குவிண்டால் விளை பொருட்கள் 5லட்சத்து 80ஆயிரத்து 384 ரூபாய்க்கு விற்பனையானது.