திமுக தலைவர் ஸ்டாலின் சிறை செல்வது உறுதி என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பவானியில் கூறினார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் தேர்தல் சுற்றுப்பயணமாக ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். முதல் நாளான இன்று பவானியில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் , திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தும் மக்கள் கிராமசபை கூட்டத்தில் எந்த மக்களுக்கு நன்மை செய்துள்ளார் என கேள்வி எழுப்பினார். இதேபோன்று நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மக்களிடம் வாங்கிய மனு எங்கே போனது?
டெண்டர் நடக்காத நிலையில் ஊழல் நடந்ததாக திட்டமிட்டு அமைச்சர்கள் மீது திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி ஆளுனரிடம் ஊழல் பட்டியல் வழங்கினார். ஸ்டாலின் பேசுவது அத்தனையும் பொய். ஸ்டாலின் சிறை செல்வது உறுதி. திமுக நிர்வாகிகள் மீதான வழக்குகளை பட்டியலிட்டால் வரும் தேர்தலில் இவர்கள் தேர்தலில் நிற்பது சந்தேகம்.நாடாளுமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. பதவிக்கு வரும் வரை திட்டங்களை அறிவிப்பார்கள். ஆனால் மக்களுக்கு எது செய்ய வேண்டுமோ அதை அதிமுக அரசு செய்யும். வரும் தேர்தலில் கூறு போட்டு விற்பவர்கள் ஆள வேண்டுமா அல்லது வளமான திட்டங்கள் கொண்டு வரும் அரசு வேண்டுமா என சிந்தியுங்கள் என்றார்.