பவானி சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம்
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.;
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில்,சித்திரை தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக, சித்திரை தேர்த்திருவிழா நடக்கவில்லை.
இதனையடுத்து, நடப்பாண்டு தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து, வேதமந்திரங்கள் முழங்க கம்பத்தில் கொடியேற்றினர். இன்று ஆதிகேசவ பெருமாள் சன்னதியில் கொடியேற்றம் நடக்கிறது. பஞ்சமூர்த்திகள் மற்றும் அறுபத்தி மூன்று நாயன்மார் திருவீதியுலா, வரும் 12ஆம் தேதி நடக்கிறது. வரும், 15ஆம் தேதி ஆதிகேசவ பெருமாள் தேரோட்டம், 16ஆம் தேதி சங்கமேஸ்வரர் தேரோட்டமும் நடைபெற உள்ளது. 19ஆம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.