பவானி: முககவசம் அணியாமல் செல்லும் பொதுமக்கள்

பவானி பகுதியில் முககவசம் அணியாமல் செல்லும் பொதுமக்களால் மீண்டும் நோய் தொற்று பரவும் அபாயம் நிலவி வருகிறது.

Update: 2021-11-30 09:30 GMT
பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் பலர் போட்டு கொண்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் பலர் பொது இடங்களுக்கு வரும் போது முககவசம் அணிவதில்லை. இதன் காரணமாக மீண்டும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இந்நிலையில் பவானி பகுதியில் பெரும்பாலான பொதுமக்கள் முககவசம் அணியாமலேயே சுற்றி திரிகிறார்கள்.

பவானி புது பஸ் நிலையம் பகுதியில் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி முககவசம் அணியாமல் பஸ் நிலையத்துக்கு வந்து செல்கிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள டீக்கடைகள் மற்றும் பொது இடங்களில் மக்கள் முககவசம் அணிவது குறித்து அக்கறையின்றி காணப்படுகின்றனர். தடுப்பூசி மேற்கொண்டதால் கொரோனா நோய்த் தொற்று கணிசமாக குறைந்துள்ளது. ஆனால் இன்னும் முழுமையாக குறையவில்லை. இது போன்ற தருணங்களில் பாதுகாப்பு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் பொது இடங்களில் முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News