45 ஆண்டுகளுக்கு பின்னர் பவானி நகராட்சியை கைப்பற்றியது தி.மு.க.
ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க. 43 ஆண்டுகளுக்கு பின்னர் கைப்பற்றி உள்ளது.;
பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி
ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 21 வார்டுகளிலும் அ.தி.மு.க. ஐந்து வார்டுகளிலும் சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் இன்று காலையில் தலைவர் பதவிக்கான நடைபெற்ற மறைமுக தேர்தலில் தி.மு.க. கவுன்சிலர் சிந்தூரி போட்டியின்றி தேர்வு பெற்ற நிலையில்., பிற்பகல் நடைபெற்ற துணை தலைவருக்கான மறைமுக தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் சி.பி.ஐ. கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததால் சி.பி.ஐ. கட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர் மணி போட்டியிட்டார்.
இதன் பின்னர் நடைபெற்ற தேர்தலில் 12 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ராஜாவை தோற்கடித்து வெற்றி பெற்றார். இதன் பின்னர் துணைத் தலைவராக பொறுப்பேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கவுன்சிலருக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் சி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதனால் பவானி நகராட்சியை 43 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. கைப்பற்றியுள்ள நிலையில், துணைத் தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் தேர்வாகி உள்ளார்.