பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் 1008 பால்குட அபிஷேக நிகழ்ச்சி

பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி வேதநாயகி அம்மனுக்கு 1008 பால்குட அபிஷேகம் நடைபெற்றது

Update: 2022-08-12 13:30 GMT

பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி வேதநாயகி அம்மனுக்கு 1008 பால்குட அபிஷேகம் நடைபெற்றது

ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறையில் உள்ள புகழ்பெற்ற பழமை வாய்ந்த சங்கமேஸ்வரர் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு உலக நன்மைகள் வேண்டி சிறப்பு யாகபூஜை நடைபெற்றது.


இதில் ஈரோடு மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதையடுத்து உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று, குரங்கம்மை உள்ளிட்ட கொடிய நோய் தொற்று ஓழிய வேண்டும், நாடு முழுவதும் பசுமையால் செழிப்படைய வேண்டும்.

குடும்ப நன்மை அடைய வேண்டும் ஆகியவற்றிற்காக யாக பூஜைகள் நடைபெற்றது.

மேலும் வேதநாயகி அம்மனுக்கு 1008 பால்குட அபிஷேகத்தில் ஏராளமான பெண்கள் குடத்தில் பால் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து வேதநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்ப்பிக்கப்பட்டது.

Tags:    

Similar News