பவானி சிபிஐ அலுவலகத்தில் மூத்த தலைவர் தா.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவேந்தல்
சிபிஐ கட்சி அலுவலகத்தில் மூத்த தலைவர் தா.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கருத்தரங்கம் நடைபெற்றது.;
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தா.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கருத்தரங்கம் ஈரோடு மாவட்டம் பவானி இந்தி கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பவானி நகர செயலாளர் வழக்கறிஞர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிபிஐ மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவேல் கருத்துரை நிகழ்த்தினார். மேலும் நகர் மன்ற தேர்தலில் வெற்றி வேட்பாளர்கள் உள்பட கட்சியினர் பங்கேற்று மறைந்த தா.பாண்டியன் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவர் முன்னெடுத்து வெற்றி கண்ட போராட்டம் உள்ளிட்ட செயல்களை கட்சியினர் நினைவு கூர்ந்து பேசினர். இறுதியாக ஒன்றிய செயலாளர் கேஎம் கோபால் நன்றியுரை நிகழ்த்தினார்.