ஈரோடு மாவட்டத்தில் அதிக வாக்குகளை பதிவு செய்தது பவானி தொகுதி

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பவானி சட்டமன்றத் தொகுதி அதிக வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-21 03:49 GMT

ஈரோடு மாவட்ட வரைபடம்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பவானி சட்டமன்றத் தொகுதி அதிக வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் என 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த 8 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று முன்தினம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

மாவட்டத்தில் மொத்தம் 19 லட்சத்து 66 ஆயிரத்து 496 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகள் 198 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. இதில் பொதுமக்கள் தங்களது தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 66.05 சதவீதமும், ஈரோடு மேற்கு தொகுதியில் 65.72 சதவீதமும், மொடக்குறிச்சி தொகுதியில் 76.27 சதவீதமும், பெருந்துறை தொகுதியில் 77.70 சதவீதமும், பவானி தொகுதியில் 78.97 சதவீதமும், அந்தியூர் தொகுதியில் 76.59 சதவீதமும், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 78.52 சதவீதமும், பவானிசாகர் தொகுதியில்76.08 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

இதில்,அதிகபட்சமாக பவானியில் 78.97 சதவீதமும், குறைவாக ஈரோடு மேற்கு தொகுதியில் 65.72  சதவீதமும் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Similar News