திமுக அரசை கண்டித்து பவானியில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம்

பவானி வட்டாட்சியர் அலுவலகம் அருகே திமுக அரசை கண்டித்து, 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-05 15:00 GMT

தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து இன்று உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு வடக்கு மாவட்ட பாஜக சார்பில், பவானி வட்டாட்சியர் அலுவலகம் அருகே மேட்டூர் சாலையில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்றது.


ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் கலைவாணி விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில்,  மாவட்ட பொதுச்செயலாளர் உத்ரசாமி,மாவட்ட பொருளாளர் செல்வம் உள்ளிட்ட பாஜக மாவட்ட, மாநில, ஒன்றிய நகர, அணிப்பிரிவு நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தொடர்ந்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் திமுக அரசு அறிவித்த 505 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும், மக்களை ஏமாற்றி வரும் அரசாக இந்த அரசு விளங்கி வருவதாகவும், அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினர். இந்த உண்ணாவிரத அறப்போராட்டமானது காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.

Tags:    

Similar News