பவானி நகராட்சியில் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று, நகர்மன்ற தலைவர் சிந்தூரி ஆய்வு

பவானி நகராட்சி 24வது வார்டில் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று, நகர்மன்ற தலைவர் சிந்தூரி நகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

Update: 2022-03-24 14:15 GMT

பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட நகர்மன்ற தலைவர் சிந்தூரி.

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி நகரமன்ற தலைவர் சிந்தூரி தொடர்ந்து 27 வார்டு பகுதியில் பொதுமக்கள் கோரிக்கை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனை தொடர்ந்து இன்று 24வது வார்டு பகுதியில் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று தண்ணீர் குழாய் சீரமைத்து சாக்கடை வசதி மற்றும் மேல்நிலை தொட்டி,கழிப்பிட வசதி குறித்து நகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை கேட்டறிந்த தலைவர் சிந்தூரி தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News